கடன் அட்டை வைத்திருக்கிறீர்களா?



  • கடன் அட்டையில் உள்ள நிலுவைத் தொகைக்கான வட்டிவீதத்தை குறைக்க சொல்லி நீங்கள் பேரம் பேசலாம், தப்பில்லை.



  • கடன் அட்டை நிறுவனம் அனுப்பும் மாதாந்திர அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தேதிக்கு முன்னதாகவே பணத்தை செலுத்தி விட்டால் அநியாய வட்டியிலிருந்து தப்பிக்கலாம்.



  • கூடுமானவரை முழு நிலுவைத்தொகையையும் செலுத்திவிடுவது நல்லது.



  • குறைந்தபட்ச தொகையை செலுத்துவதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை (கடன் அட்டை நிறுவனத்தை தவிர)



  • கடைகளில் கடன் அட்டை மூலம் நீங்கள் வாங்கிய பொருட்களுக்கான ரசீதுகளை பத்திரமாக வைத்திருங்கள்.



  • கடன் அட்டை நிறுவன கணக்கு அறிக்கை வந்த பிறகு அதனை ரசீதுகளுடன் ஒப்பிட்டு சரிபார்த்துக்கொள்வது நல்லது.



  • கடன் அட்டை மூலம் வாங்கிய கடன் நிலுவைத்தொகை கைமீறுவதாக தெரிந்தால் உடனடியாக தனிநபர் கடனையோ அல்லது குறைந்த வட்டி கடனையோ வாங்கி கடன் அட்டை கணக்கை தீர்த்துவிடுவது நல்லது.



  • கடன் அட்டை நிலுவைத்தொகையை கெடு தேதிக்கு நான்கைந்து நாட்களுக்கு முன்னதாக காசோலை மூலம் செலுத்துவது நல்லது. பணமாக செலுத்தினால் ரூ.100 அபராதம் விதிக்கிறார்கள். இணையம் வழியே செலுத்தினால் வேண்டுமென்றே நான்கைந்து நாட்கள் கழித்து உங்கள் கணக்கில் வரவு வைத்துவிட்டு அபராதம் விதிக்கும் நிறுவனங்களும் உண்டு.



  • இனி கடன் அட்டையின் பக்கமே போகப்போவதில்லை என்று நீங்கள் முடிவு செய்துவிட்டீர்கள் என்றால் அதுகுறித்து கடன் அட்டை நிறுவனத்திற்கு ஒரு கடிதம் எழுதுங்கள்.



  • அட்டையை நான்கு துண்டுகளாக வெட்டி அவர்களுக்கு அனுப்பிவிடுங்கள்.