சிறுதொழில்களுக்கு அரசு என்ன செய்ய வேண்டும்?

Image by <a href="https://pixabay.com/users/Pavlofox-514753/?utm_source=link-attribution&amp;utm_medium=referral&amp;utm_campaign=image&amp;utm_content=1452987">Pavlofox</a> from <a href="https://pixabay.com/?utm_source=link-attribution&amp;utm_medium=referral&amp;utm_campaign=image&amp;utm_content=1452987">Pixabay</a>


கொரொனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள  தேசிய அளவிலான பொருளாதார நெருக்கடிகளை சமாளிப்பதற்காக ரூபாய் 20 லட்சம் கோடி மதிப்பிலான சலுகை தொகுப்பு ஒன்றை நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருந்தார். 


அதேபோல இன்று (14 மே) வேளாண்மை, புலம் பெயர் தொழிலாளர், நடைபாதை வணிகர்கள் ஆகியோருக்கான சலுகைத்திட்டங்களை அறிவித்துள்ளார்.


சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செய்வதறியாது திகைத்து நின்ற வேளையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பு ஓரளவுக்கு நம்பிக்கையை விதைத்திருக்கிறது இருக்கிறது எனலாம்.  அதே நேரத்தில்  வராக்கடன் மேலும் என பலரையும் திகைப்படைய செய்திருக்கிறது. 


“மத்திய அரசு துணிந்து கடன்களை  வாங்க  முன்வர வேண்டும் அதே போல மாநில அரசுகளும் கடன்களைப் பெற  மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று முன்னாள் நிதியமைச்சர்  ப.சிதம்பரம் அவர்கள்  கருத்து தெரிவித்திருக்கிறார். 


 


 அதாவது மத்திய மாநில அரசுகள் பெரும் கடன் தொகை  பல்வேறு அடிப்படை கட்டுமான பணிகள் மற்றும் பல  வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்.  இதன் மூலம் லட்சக்கணக்கான அவருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.  அதன் விளைவாக நாட்டில் பணப்புழக்கம் ஏற்படும் அது தற்போதைய சூழலை சமாளிக்க பெரிய அளவுக்கு உதவும் என்பதுதான் அவர் சொல்லும் விளக்கம். அவரைப்போலவே பல்வேறு பொருளாதார வல்லுனர்களும் அரசியல்வாதிகளும் தங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்த வண்ணம் உள்ளனர். 


கொரொனா  காலத்திற்கு மட்டுமல்லாது பொதுவாகவே சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவது மத்திய மாநில அரசுகளின் இன்றியமையாக் கடமையாகும்.  ஏனென்றால் இந்நிறுவனங்கள்தாம் நாட்டின் மிகப்பெரிய வேலைவாய்ப்பு அளிப்பவராக செயல்படுகின்றன.


  நாட்டின் கட்டுமானத்தில் மிகப்பெரிய பங்கு வகிப்பவர்கள் இது துறையினர்தான். ஜிஎஸ்டி,  பணமதிப்பிழப்பு  முதலிய பல்வேறு அம்சங்களை பாதிக்கப்பட்டுள்ள இந்நிறுவனங்களுக்கு கொரொனா ஊரடங்கு, பெரிய அடியாக அமைந்துவிட்டது என்பதை நாம் மறுக்க இயலாது.


 


இன்றைய சூழலை பயன்படுத்தி யாவது இப்போ இருக்கு நீண்டகால அடிப்படையில் நலம் பயக்கும்  அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட வேண்டும்.  அந்த சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு  மத்திய மற்றும் மாநில அரசுகள் செய்ய வேண்டியவை என்னென்ன என்று பார்ப்போம்.


 


செய்ய வேண்டியது என்ன?


 


1. கிராமியத் தொழில்களுக்கு சிறப்பு கவனம்:


 


மகாத்மா காந்தி அடிகள் கண்ட கனவு கிராமசுயராஜ்யம் என்பதே.  அதற்கு அடிப்படையாக இருப்பவை கிராம தொழில்கள்.  கைத்தொழில்களை  வளர்த்துவிடுவதன் மூலமாக மட்டுமே கிராமியப் பொருளாதாரம் மென்மேலும் வளரும்.


 


அந்தவகையில் கிராமிய கைவினைஞர்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கென தனியாக ஒரு தொழில் கொள்கையை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.  இத்துறைக்கு நிதிநிலை அறிக்கையில் கணிசமான அளவு தொகையை ஒதுக்கீடு  செய்ய வேண்டும். 


 


பொதுவாக கிராமிய கைவினைஞர்கள் உள்ளூர் சந்தையில் மட்டுமே நம்பியுள்ளனர்.  பெரிய நகரங்களுக்கு அவர்கள் தயாரிப்புகள் செல்லும்பொழுது இடைத்தரகர்கள் வாயிலாக மட்டுமே வாடிக்கையாளர்களை  சென்று சேர்கின்றன.


இதனால் விலையும் கணிசமான அளவு அதிகரிக்கிறது.  36 கிடைக்கும் பயன் குறைவாகவும் வாடிக்கையாளருக்கு செல்லும்போது விலை மிகுந்த பொருளாகும் அது ஆகிவிடுகிறது.  இடைத்தரகர்கள் மட்டுமே இதில் பயன்பெறுகின்றனர்.



இதற்கு மாற்றாக கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி வளர்ச்சி வாரியம் நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் கிளை அலுவலகத்தை தொடங்கி அவர்களுக்கு தேவையான  ஏற்றுமதி சார் பயிற்சிகளை அளித்து அவர்களின் தயாரிப்புகளை வெளிநாடுகளுக்கு நல்ல விலைக்கு ஏற்றுமதி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். 


 


குழுமத் தொழில்(cluster approach) கையில் குறிப்பிட்ட தொழிலை குறிப்பிட்ட பகுதியில் செய்வோரை குழுக்களாக ஒருங்கிணைத்து கூட்டு உற்பத்தி, கூட்டு சந்தைப்படுத்தல், கூட்டு ஏற்றுமதி என்று அவர்களை அடுத்த நிலைக்கு உயர்த்த வேண்டும். 


 


அவர்களுக்குத் தேவையான  அறிவுசார் சொத்துரிமை சட்டங்கள் குறித்த பயிற்சிகள் உதவிகள் ஆகியவற்றையும் அரசு இலவசமாக வழங்க வேண்டும். சென்னை கிண்டியில் உள்ள அறிவுசார் சொத்துரிமை மையத்தின் கிளைகள் மாவட்டம்தோறும் சிறிய அளவில் தொடங்கப்பட்டு இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.  


 


ஏற்றுமதியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தனி வங்கிக்கிளைகள் தொடங்கப்படுவது போல,  அவர்களுக்காக தனி வங்கி,  பொதுத்துறை வங்கிகளின் சிறப்பு கிளைகள் ஆகியவை வட்ட அளவில் (taluk level)  உருவாக்க தேவையான உதவி வழங்கப்பட வேண்டும். 


 


http://www.artisan.gov.in/ என்ற பயனுள்ள இணையதளத்தை மத்திய அரசு நிர்வகித்து வருகிறது. நாட்டிலுள்ள 70 லட்சம் கைவினைஞர்களுக்கு உதவும் நோக்கில் இது இயங்கி வந்தாலும் இதுகுறித்த விழிப்புணர்வு பெருமளவுக்கு கிராமப்புறங்களுக்குச் செல்லவில்லை. இதுகுறித்தும் பெரிய அளவுக்கு விளம்பர பிரச்சாரங்களை அரசுகள் செய்ய வேண்டும்.


(வளரும்)